Thursday, August 26, 2010

தமிழ் கவிதைகள் (படங்களுடன்)


மொழி...!!!
உலக மொழியின் கணக்கில்
தவறு உள்ளது
ஆம்,
உன் விழியின் மொழியை
அறியாத பேதைகளால்...!!!






உனக்கு தெரியாது
என் கண்கள் பேசியது உன்னிடம்
உன் இதயம் மறுத்தது மௌனமாய் உனக்கு தெரியாது
வலி என் உயிர்க்கு என்று ?


வில்லனாய் மேகம் ?
அவளை (நிலவு) பார்க்க
நினைத்தும் முடியவில்லை...!
விதியாய் மறைக்கிறது மேகம் ...!



பொட்டு...
நிலவுக்குள் ஓர்
நிலவு நெற்றின்
"பொட்டு...!"




நண்பர்கள்
நாம் மௌனத்தையும்
ரசிப்பவள்
தாய்....
நாம் மௌனத்தியில்
பேச முடியாமல் இருக்கும்
வார்த்தைகளை அர்த்ததையும்
புரிந்துகொள்பவர்கள் தான்
நண்பர்கள்


குழந்தையாக
நூறு வருடம் அல்ல
கோடி வருடம்
வழத்திட ஆசை
எனக்கு
என் அன்னை
மடியில்
குழந்தையாக

கோழை
என் கண்களுக்கு
கண்ணிர் சிந்த தெரியாது
ஏன் என்றால்?
ஏன் இதயத்திற்கு
வலிகளை தாங்க தெரியும்
வலிகளை மறைக்க இதயம் ,
பழகிகொண்டது
எவ்வளவோ முயன்றும்
என கண்ணீரை மறைக்க முடியவில்லை
அவளிடம்.....
என்ன செய்வது?
பெற்று எடுத்தவளுக்கு தெரியாத
அவள் உயிரை பற்றி
என்றும்
உன் முன்னால்
நான் கோழை தான்
என்பதில் பெருமை எனக்கு
அம்மா ...........

எது நட்பு ?
நீ செய்வது
தவறு என்று
தெரிந்தும்
என்றும் எதிலும்
உனக்கு துணையாகநிற்ப்பது


இவளுக்கு இவன்
என்றாவது ஒரு நாள்
இவளுக்கு இவன் பிடிக்காமல்
போகுமானால்
அந்த கனம் முன்பே
இவனின் மௌனம் நிரந்தரமாகட்டும்




மௌனம்
மௌனம்மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்
அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்
கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்
அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......





உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்

எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?

உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்

நின்று விடாதே
திரும்பிப் பார்

வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...


என்னை விட...
என்னவள் தூங்கும்
நேரத்தில்.......
நிலவு!
மறைந்துக் கொண்டு
பார்க்கிறது
என்னை விட அவள்
அழகு என்று...!


மழையே
மழையே
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏ தெரியுமா,
நா இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தா








நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்

உன் அழகை கண்டேன்,
நெருங்கி வந்தேன்,
சிரித்தாய்.
தனி அறையில் நீயும், நானும்,
உன்னை ரசித்தேன்,
உன் பேச்சை ரசித்தேன்,
நீ விலகிச்செல்வதை ரசித்தேன்,
நீ நெருங்கி வருவதை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து
பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பப்படி
வரைந்து ரசித்தேன்,
உன்னுடன் விளையாடி ரசித்தேன்,

உன்னால்....

எனக்கு பிடித்த வார்த்தைகளில்
இருந்து அழுகையை எடுத்துவிட்டு
காதலை சேர்த்துக்கொண்டேன்

1 comment: